சீனா: ஓடுதளத்தில் இருந்து விலகி தீப்பிடித்த விமானம்

சீனாவின் சாங்கிங் நகரில் திபெத் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானம் புறப்படும்போது ரன்வேயிலிருந்து சறுக்கி தீப்பிடித்து விபத்துக்குள்ளானது.

இந்த தீவிபத்தில் விமானத்தில் இருந்த 113 பயணிகளும், 9 சிப்பந்திகளும் பத்திரமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானம் புறப்படும் நேரத்தில் ரன்வேயில் இருந்து விமானம் விலகிச் சென்று தீப்பிடித்தது. உடனடியாக மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு பயணிகள் அவசர வழியாக வெளியேற்றப்பட்டனர்.

இந்த தீவிபத்தில் 25 பேருக்கு தீக்காயம் ஏற்பட்ட நிலையில் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.