சின்னக் கலைவாணர் விவேக் சாலை!!!

தமிழ் சினிமாவில் சின்னக் கலைவாணராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்தவர்  நகைச்சுவை நடிகர் விவேக். 2021 ஏப்ரல் 17ம் தேதி மாரடைப்பு காரணமாக விவேக் திடீரென உயிரிழந்தார்.

விவேக்கின் முதலாம் ஆண்டு நினைவு தினம் ஏப்ரல் 17ம் தேதி அனுசரிக்கப்பட்டது.

விவேக் குடும்பம்

விவேக்கின் மனைவி அருட் செல்வி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தார். அதில் நடிகர் விவேக்கின் வீடு தற்போது அமைந்திருக்கும் சாலைக்கு விவேக்கின் பெயர் சூட்டப்பட  வேண்டும்

இந்த  மனுவை ஏற்று முதல்வர் ஸ்டாலின் உடனடியாக விவேக் பெயரை சூட்ட வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டது.  மே மாதம் 3 ஆம் தேதி அதன் பெயர் பலகை திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது

விவேக் சாலை

நடிகர் விவேக் வீடு அமைந்துள்ள பத்மாவதி நகர் பிரதான சாலைக்கு நேற்று “” என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/