அரசு பஸ்சில் முதல்வர் ஆய்வு !!

தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது.

திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை கோபாலபுரத்தில் உள்ள தனது தாயார் தயாளு அம்மாள் வீட்டிற்கு சென்றார்.

திமுக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு: அரசு பஸ்சில் பயணம் செய்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்

 

முதலமைச்சர் அரசு பஸ்சில் திடீரென ஏறியதால் பஸ்சில் இருந்த பயணிகள் இன்ப அதிர்ச்சியடைந்தனர். பஸ் கண்டெக்டரிடம் பஸ் பயணம் விவரம் குறித்து கேட்டறிந்தார்.

பெண் பயணி ஒருவரிடம், திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட பெண்களுக்கான இலவச பஸ் பயண திட்டம் குறித்து கேட்டார்.

பள்ளி மாணவர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

அப்போது பேசிய அந்த பெண், இந்த திட்டத்தால் நாங்கள் நல்ல பயன் அடைந்துள்ளோம். இந்த திட்டத்திற்கு உங்களுக்கு நன்றி என கூறினார்.

அங்கிருந்து முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்ற மு.க.ஸ்டாலின் அங்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.