நெய் பொங்கலில் கரப்பான்பூச்சி : ரெய்டு காட்டிய அதிகாரிகள் !!

கடலூர் மாவட்டத்தில் பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் மாநகராட்சி ஒப்பந்ததாரர் ஒருவர் நெய் பொங்கல் மற்றும் மெதுவடையை பார்சலில் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

பின்னர் குடும்பத்தினருடன் பொங்கல் சாப்பிட பார்சலை பிரித்தப்போது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த பொங்கலில் கரப்பான் பூச்சி ஒன்று இருப்பதை அறிந்த அவர்கள் திகைத்து நின்றனர்.

இதனிடையே அந்த உணவகத்திற்கு சென்று கேட்டபோது சரியான பதில் கூறாமல் அவர்கள் வாங்கிய பொங்கலுக்கு மட்டும் பணத்தை கொடுத்ததாக தெரிகிறது. இந்த விவகாரம் சோசியல் மீடியாவில் வைரலானதையடுத்து அம்மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் இறங்கினர்.

இதுகுறித்து கடையின் உரிமையாளரிடம் சாப்பிடும் உணவில் கரப்பான் பூச்சி வருவதை கூட பார்க்காமல் எப்படி அஜாக்கிரதையாக செயல்பட்டீர்கள் என கேள்வி எழுப்பினர். அதோடு, அந்த உணவகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது மட்டுமில்லாமல் இது குறித்து விளக்கம் அளிக்குமாறு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.