மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா!

மீண்டும் கொரோனா தொற்று கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. தற்போது சென்னை ஐ.ஐ.டி. மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

மருத்துவ கல்லூரி மாணவர்கள்

செங்கல்பட்டு திருப்போரூர் பகுதியில் சத்யசாய் தனியார் மருத்துவக் கல்லூரியில், முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கிய நிலையில், மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று கண்டறியப்பட்ட 25 மாணவர்களுக்கு லேசான அறிகுறிகள் உள்ளதால் அவர்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

ரூ.1000யைக் கடந்தது சிலிண்டர் விலை!

இதே கல்லூரியில் 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், தற்போது மேலும் 18 பேருக்கு உறுதியானது

கொரோனா

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 79ஆக இருந்த நிலையில், தற்போழுது மேலும் 25 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மருத்துவ கல்லூரியில் அனைவருக்கும் பரிசோதனை செய்ய வேண்டும், தொற்று பரவாமல் இருக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.