வேலையை காட்டத்தொடங்கிய கொரோனா !!!

இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருப்பது அச்சத்தை அதிகரித்துள்ளது.நேற்று 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா தொற்றால் 3,275 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஒரே நாளில் 70 பேருக்கு கூடுதலாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நோயாளிகள் 55 பேர் பலியாகியுள்ளனர்.

தினசரி உயிரிழப்பும் அதிகரித்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை அதிகரித்துள்ளது.

பிரியாணி சாப்பிட்டு 41 பேர் மருத்துவமனையில் அனுமதியா ??

குழந்தைகளுக்கு கொரோனா

கடந்த 24 மணி நேரத்தில் 3,010 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.

தற்போது மருத்துவமனையில் மொத்தம் 19 ஆயிரத்து 719 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தியாவில் 1,89,63,30,362 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.