நடிகை மஞ்சு வாரியரை காணவில்லையா ??இயக்குனரின் பதிவால் பரபரப்பு..

மலையாள திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் மஞ்சு வாரியர். இவர் தமிழிலும் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகை மஞ்சு வாரியரை காணவில்லை என்றும் அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் பிரபல இயக்குனர் பதிவிட்டிருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

பிரபல மலையாள இயக்குனரான சணல் குமார் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது : “நடிகை மஞ்சு வாரியர் கந்துவட்டிக்காரர்கள் சிலரின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்.

அவரது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என சோசியல் மீடியாவில் நான் பதிவிட்டு 4 நாட்கள் ஆகிறது.

இதுவரை மஞ்சு வாரியரோ, அவருக்கு நெருக்கமானவர்களோ இதுகுறித்து பதிலளிக்கவில்லை. நடிகை மஞ்சு வாரியரின் மௌனம் எனக்கு சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/