மாநிலப் போக்குவரத்து துறைக்கு பணியமர்த்தும் டிஎன்பிஎஸ்சி !!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 8 மாநிலப் போக்குவரத்து நிறுவனங்களுக்கு நடத்துனர்கள், ஓட்டுநர்கள் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்களை சேர்பதற்கான மிகப்பெரிய அளவிலான ஆட்சேர்ப்பை நடத்துகிறது.

 

கடைசியாக, 2014-2015ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் டிரைவர், கண்டக்டர்கள் பணி நியமனம் செய்யப்பட்டது.தற்போழுது சுமார் 10,000 பணியிடங்களை நிரப்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது

ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கான குறைந்தபட்ச கல்வி மற்றும் வயது தகுதியை துறையின் தொழில்நுட்பக் குழு முடிவு செய்யும். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்” என சொல்லப்படுகிறது.

போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறுகையில், அதிக தேவை உள்ள வழித்தடங்களில் அதிக பேருந்துகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், பேருந்து வழித்தடங்களை ஆய்வு செய்து அதனை நடைமுறை படுத்த உள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்து அறநிலையத் துறையில் வேலை !! 10ம் வகுப்பு போதும் ..

மாதம் குறைந்தது 30 தொழிலாளர்கள் ஓய்வு பெறுகிறார்கள். இந்த நடவடிக்கை ஆட்சேர்ப்பை வெளிப்படையானதாக மாற்றும் என நம்புவதாக தெரிவித்தார்