30 வருடத்துக்கு முன்னடி பிரதமர் மோடி எப்படி இருந்தாருனு தெரியுமா ??

கொரோனாவின் தாக்கம் குறைந்ததால், பல்வேறு நாடுகளுடன் வர்த்தக உறவுகளை மேம்படுத்த இந்தியா முயற்சித்து வருகிறது.பிரதமர் நரேந்திர மோடி ஐரோப்பாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

முதலில் அவர் ஜெர்மனி தலைநகர் பெர்லின் சென்றார். அங்கு அந்த நாட்டின் பிரதமர் ஒலாப் ஸ்கோல்ஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

பின் ஜெர்மனி பயணத்தை முடித்து கொண்ட பிரதமர் மோடி நேற்று டென்மார்க் சென்றார்.டென்மார்க்கில் நடக்கும் இரண்டாவது, இந்தியா – நார்டிக் மாநாட்டில் பங்கேற்றார்.

பிரதமர் மோடி ஜெர்மனியில் சுமார் 30 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படம் 1993ஆம் ஆண்டு நரேந்திர மோடி அமெரிக்காவுக்குப் பயணம் செய்தபோது ஜெர்மனியின் பிராங்பேர்ட்டில் தங்கியிருந்தபோது எடுக்கப்பட்டது என தகவல் வந்துள்ளது .

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/