தமிழக அரசு சார்பில் வேலைவாய்ப்பு முகாம்…! எப்பொழுது தெரியுமா …?

தமிழ் நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலகங்களிலும், இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் வேலைவாய்ப்பு வெள்ளி – ஆக அனுசரிக்கப்படுகிறது.

சென்னையில் வரும் 27ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்படுகிறது.

சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் இணைந்து 27.05.2022 (வெள்ளிக்கிழமை) அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்தப்பட உள்ளன.

இந்த வேலைவாய்ப்பு முகாம் சென்னை – 32 கிண்டி , ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10.00 மணி முதல் 2.00 மதியம் மணி வரை நடைபெற உள்ளது.

இம்முகாமில் 30- வயதிற்கு உட்பட்ட 8- ஆம் வகுப்பு 10- ஆம் வகுப்பு, ப்ளஸ் 2 ,ஐ.டி.ஐ , டிப்ளமோ, கலை, அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பிரிவில் எதாவது ஒரு பட்டம் ஆகிய கல்வித்தகுதி கொண்டவர் கலந்து கொள்ளலாம்.

டிகிரி முடித்தால் போதும் இந்தியன் வங்கியில் வேலை வாய்ப்பு !!

இம்முகாமில் 25-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் வீர ராகவ ராவ் தெரிவித்துள்ளார்கள்.