TMB தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!!

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

காலிப்பணியிடங்கள்: Managing Director and Chief Executive Officer

வயது வரம்பு: மார்ச் 31, 2022 அன்று 62 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

அடிதூள்..! TMB தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!!

தகுதி விவரம்:

தலைமைப் பொது மேலாளர்/பொது மேலாளர் கேடரில் அல்லது அதற்கு மேல் ஏதேனும் ஒரு கொமர்ஷல் வங்கியில் பணிபுரிந்து அல்லது ஓய்வு பெற்றிருக்க வேண்டும். கருவூலம் / அந்நிய செலாவணி மற்றும் காப்பீடு, பரஸ்பர நிதிகள் போன்ற நீட்டிக்கப்பட்டவை உட்பட அனைத்து வணிக வங்கி நடவடிக்கைகளிலும் அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல்முறை:

மின்-விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணலின் விவரங்களுடன் அஞ்சல் / மின்னஞ்சல் மூலம் தனித்தனியாகத் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

வங்கி பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் www.tmbnet.in/tmb_careers/ வங்கியின் இணையதளத்தில் இருந்து தேவையான விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, முழு விவரங்களையும் அளித்து, மின்னஞ்சல் (cs@tmbank.in) அல்லது தபால் மூலம் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் உறையின் மீது “Confidential-Application for the Post of MD & CEO” எனக் குறிப்பிட்டு விண்ணப்பத்தை 10.05.2022 க்குள் சமர்ப்பிக்கலாம்.

அனுப்ப வேண்டிய முகவரி:

தலைவர்
MD & CEO தேர்வுக் குழு
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி லிமிடெட்,
தலைமை அலுவலகம், 3வது தளம்
57, V.E. சாலை,
தூத்துக்குடி- 628002

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/