நெல்லை சிவா 16 ஜனவரி 1952 அன்று திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வேப்பிலையன்குளம் என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார்.
சிவாஜி கணேசனின் தீவிர ரசிகராக இருந்த இவர், திரைப்படங்களில் நடிப்பதற்காக சென்னை வந்தார். அந்த நேரத்தில் நடிப்பு வாய்ப்புகளைத் தேடியபடி இருந்த நடிகர்களான மன்சூர் அலி கான் மற்றும் போண்டா மணி ஆகியோரை சந்தித்து நல்ல நட்பைப் பெற்றார்.
மகாபிரபு, வெற்றிக் கொடி கட்டு, கண்ணும் கண்ணும் போன்ற பிரபல திரைப்படங்களில் நகைச்சுவை நாயகனாக நடித்த நெல்லை சிவாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று. (மே 11 2021)
திரைப்படங்களில் இவர் முற்றிலும் நெல்லை வட்டார வழக்கில் பேசும் வழக்கம் உள்ளவர். இது இவரை மற்ற துணை நடிகர்களிடமிருந்து தனித்துவமாகக் காட்டுகிறது. இவர் தனது வாழ்க்கையில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் 2020 இல், விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார்.