பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு 106 ஆண்டுகள் சிறை தண்டனை

கேரளாவை சேர்ந்த ரப்பர் தொழிலாளி ஒருவர் தனது 12 வயது மகளை மிரட்டி கற்பழித்ததாக கூறப்படுகிறது.

பலமுறை அவர் மீண்டும் மீண்டும் பலாத்காரம் செய்ததால் கடந்த 2017-ம் ஆண்டு அந்த சிறுமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதனையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தனர்.

அப்போதுதான் அவரது தந்தை சிறுமியை பலாத்காரம் செய்தது வெளியுலகத்திற்கு தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து தொழிலாளியை கைது செய்தனர். இந்த வழக்கு கேரளாவில் உள்ள விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி உதயகுமார், பெற்ற மகளை மிரட்டி பலமுறை கற்பழித்த தொழிலாளிக்கு 106 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.17 லட்சம் அபராதமும் விதித்து பரபரப்பு தீர்ப்பு கூறினார்.