எல்.ஐ.சி.யில் தீ விபத்து!!

இன்று காலை 7 மணியளவில் மும்பை சாண்டாகுரூஸில் இயங்கி வரும் 2 மாடி எல்.ஐ.சி. அலுவலக கட்டிடத்தில் திடீரென்று தீவிபத்து ஏற்பட்டது.

mumbai lic

காலை 7 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டதால் அலுவலர்கள் யாரும் பணியில் இருக்கவில்லை. இதனால் பெரிய உயிர் சேதம் ஏற்படவில்லை.

அலுவலக கட்டிடத்தில் ஏற்பட்ட திடீர் தீயால் ஆவணங்கள், கோப்புகள் போன்றவை எரிந்து நாசமாகியுள்ளன. 8 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

திருப்பதியில் நயன்தாராக்கு திருமணமா ??

தீயணைப்பு அதிகாரிகள் கூறும்போது, ‘‘எலக்ட்ரிக் வயரிங், கம்ப்யூட்டர், கோப்புகள், மரசாமான்களில் தீ பற்றியுள்ளது. இது வரை எந்த காயங்கேளா, உயிரிழப்புகளோ ஏற்படவில்லை’’.

mumbai lic

இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. தங்களது காப்பீட்டு ஆவணங்கள் என்னவாகி இருக்கும் என்று வாடிக்கையாளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.