உலகம் முழுவதுமே கொரோனா தொற்று பரவல் பெருமளவில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், ‘குரங்கு காய்ச்சல்’ தீவிரமடைந்துள்ளது.
அமெரிக்காவில், ஒருவருக்கு ‘குரங்கு காய்ச்சல்’ உறுதிப்படுத்தப்பட்டுள்ளதன் மூலமாக அதிகாரப்பூர்வமாக ‘குரங்கு காய்ச்சல்’ தொற்று அமெரிக்காவில் ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் கனடா சென்று வந்த அவருக்கு ‘குரங்கு காய்ச்சல்’ இருப்பதை அமெரிக்கா நேற்று உறுதிப்படுத்தி உள்ளது.
குரங்கு காய்ச்சல் வைரஸ் மிக அரிதாக இருந்தாலும், தீவிரமான வைரஸ் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். அம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்களைப் போன்று, உடலில் சொறி ஏற்படுவதற்கு முன்பாக காய்ச்சல், தசை வலி மற்றும் வீக்கம் , கைகளிலும், உடலிலும் புண்கள் போன்ற அறிகுறிகளுடன் நோய் தொடங்குகிறது.
கியூபெக் நகரமான மாண்ட்ரீலில் உள்ள பொது சுகாதார அதிகாரிகள் குரங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட 13 நோயாளிகள் குறித்து விசாரித்து வருகின்றனர்.ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் நாடுகளில் 40 க்கும் மேற்பட்டவர்களுக்கு குரங்கு காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பொதுத் துறை நிறுவனங்களை தனியார்மயமாக்க படுகிறது – இயக்குனர் முடிவு !!
குரங்கு காய்ச்சல் நோய்க்கு சீனாவில் ஒருவர் பலியாகி உள்ள சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.