கில்லி பட பாணியில் மிளகாய் பொடி தூவி ஏடிஎம் கொள்ளை!

லட்சுமி விலாஸ் என்ற வங்கியின் ஏடிஎம், நாமக்கல் அடுத்துள்ள பெருமாள் கோவில் மேடு பகுதியில் செயல்பட்டு வருகிறது

இந்த ஏ.டி.எம். இயந்திரத்தை சாமர்த்தியமாக வெல்டிங் எந்திரத்தைக் கொண்டு உடைத்து சுமார் 5 லட்சம் ரூபாய் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் நாமக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏடிஎம் கொள்ளை

கில்லி படத்தில் நடிகர் விஜய் தன்னை போலீசார் அடையாளம் கண்டு கொள்ளாமல் இருக்க மாடிக்கு மாடி தாவிச் சென்று மிளகாய் பொடியை தூவி போலீஸ் மோப்ப நாய்களை திசை திருப்புவார்.

அது போல கிரிமினல் புத்தி கொண்ட கொள்ளையர்கள், மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தங்களை தேடி பிடித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் மிளகாய் பொடியை தூவி தடயங்களை அழித்துவிட்டு சென்றுள்ளனர்.

ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளை வைத்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/