“அண்ணனுக்கு ஒரு ஒரு கூல் டிரிங்ஸ் கொடுங்க’ குளிர்பான கடைக்கு வந்த குரங்கு

கடலூர் மாவட்டம் வேப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் அதிகமாக காப்புக்காடுகள் உள்ளன. இந்த காப்புக் காடுகளில் மான், மயில் ,காட்டுப்பன்றி, முயல் உள்ளிட்ட வனவிலங்குகள் கூட்டம் கூட்டமாக வசித்து வருகின்றது.

இந்நிலையில், அதிக வெயில் தாக்கம் காரணமாக வன விலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு படை எடுக்கத் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக குரங்குக் கூட்டம் வேப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள குளிர்பானம் கடையில் குளிர்பானம் கேட்டு வாங்கிக் குடித்துச் செல்கிறது.

அதிக வெப்பம் காரணமாக மனிதர்கள் போல் வன விலங்குகளும் குளிர் பானத்தை தேடி கடைக்கு வருவது பொது மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது