மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை!எவ்வளவு தெரியுமா !!

சர்வதேச நிலவரத்துக்கு ஏற்ப தங்கம் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது.

13ம் தேதி ஒரே நாளில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.544 சரிந்தது. 14ம் தேதி ரூ.144 குறைந்து, சவரன் ரூ.37,896க்கு விற்கப்பட்டது.நேற்று மாலை வர்த்தக முடிவில் தங்கம் சவரனுக்கு ரூ.72 குறைந்து, ரூ.37,824க்கு விற்பனையானது.

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.344 உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.344 உயர்ந்து, ரூ.38,168-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.43 உயர்ந்து, ரூ.4,771-க்கு விற்பனையாகிறது.2ம் நாளாக கடை அடைப்பு !!

சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.20 உயர்ந்து, ரூ.65.40க்கு விற்கப்படுகிறது.