இன்று சென்னை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. தமிழக ஆளுநர்ஆர்.என்.ரவி தலைமையில் நடக்கும் இந்த விழாவில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்துகிறார்.

சென்னை பல்கலைக்கழகத்தின் 164-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
உயர்கல்வித் துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணை வேந்தருமான பொன்முடி வாழ்த்துரை வழங்குகிறார்.
இணையத்தில் வைரலான விக்ரம் டிரைலர்!
பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.கவுரி,பதிவாளர் (பொறுப்பு) இளங்கோவன் வெள்ளைச்சாமி, தேர்வுகட்டுப்பாட்டு அலுவலர் கே.பாண்டியன் மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர் கலந்துகொள்கின்றனர்.