11 மாவட்டங்களில் கனமழையா ?? வானிலை !!

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தற்போது புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு அசானி என பெயர் வைத்துள்ளனர்.

மழை

மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக மேற்கு வங்கம், ஒரிசா பகுதிகளில் தற்போது தீவிர மழை கொட்டி வருகிறது.

சென்னை உட்படட தமிழகத்தில் உள்ள 33 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை கொட்டித்தீர்க்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த அசானி புயலானது இன்று இரவு ஆந்திர கடற்கரைக்கு மிக அருகில் வந்து பின்னர் வடகிழக்கு திசையில் நகர்ந்து செல்லும். இதனால் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று மிகக்கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தளபதி 66 – விஜயின் நியூ லுக்!!

காஞ்சிபுரம்,செங்கல்பட்டு, திருவள்ளூர்,திருவண்ணாமலை,விழுப்புரம், திருவாரூர்,வேலூர்,ராணிப்பேட்டை, திருப்பத்தூர்,கிருஷ்ணகிரி,தர்மபுரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை தொடர்ந்து 2 நாட்களுக்கு மழை விட்டுவிட்டு பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.