மீண்டும் உயர்ந்த கொரோனா!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,205 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

#Breaking:மக்களே உஷார்...மீண்டும் உயர்ந்த கொரோனா - ஒரே நாளில் இவ்வளவு பேருக்கா?..!

இந்தியாவில் நேற்று தினசரி கொரோனா பாதிப்பு நாளில் 2,568 ஆக இருந்த நிலையில் ஒரே நாளில் 3,205 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா இறப்பு எண்ணிக்கை நேற்று 20 ஆக இருந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 31 ஆக அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் 2,802 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 19,509 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் ஒரே நாளில் 4,79,208 கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/