கல்லூரிகளுக்கும் விடுமுறை!!

அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக உயர்கல்வித்துறை செயலாளர் கார்திகேயன் உத்தரவு பிறப்பித்தார் . மே 14ஆம் தேதி கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

School_students

முதுகலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான பொது நுழைவுத் தேர்வு , வரக்கூடிய 14ஆம் தேதி நடைபெற இருக்கிறது .

இந்த தேர்வில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் இளங்கலை பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.

அதற்கு வசதியாக 14ஆம் தேதி கலை அறிவியல் கல்லூரிகள் மட்டுமில்லாமல் அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது .

கொரானா தொற்று பிறகு அனைத்து கல்லூரிகளும் வாரத்திற்கு ஆறு நாட்கள் இயங்கி வருகின்றன . அதன்படி சனிக்கிழமையும் கூட வேலை நாட்களாக இருந்து வருகிறது .

பள்ளிகள் திறப்பு தேதி ஒத்திவைப்பு…

பொதுத்தேர்வை அடிப்படையில் மாணவர்கள் பங்கேற்பதற்கு வசதியாக வரும் 14ஆம் தேதியன்று அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுவதாக உயர்கல்வித்துறை தெரிவித்திருக்கிறது.