குழந்தைகளை பாதிக்கும் தக்காளி காச்சலை தவிர்ப்பது எப்படி ?..

கொரோனா எனும் கொடிய வைரஸ்க்கு அடுத்து, கேரளாவில் புதிய வைரஸ் பரவத் தொடங்கி இருக்கிறது.

தக்காளி காய்ச்சல் என கூறப்படும் இந்த வைரஸால் இதுவரை 85 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.கேரளாவின் பல பகுதிகளில் இந்த வைரஸ் பரவியுள்ளது.

5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இந்த காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ​​இந்த காய்ச்சலுக்கான உண்மையான காரணம் குறித்து முழுமையான தகவல்கள் இல்லை, ஆனால் அதன் தாக்கத்தை கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தக்காளி காய்ச்சல் என்பது சிறு குழந்தைகளை மட்டுமே தாக்கும் ஒரு வகை காய்ச்சல் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

கேரளாவில் இந்த காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், மற்ற மாநிலங்களும் உஷார் நிலையில் இருக்க வேண்டும் என்று கேரள சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..

தக்காளி காய்ச்சல் என்பது தொட்டால் பரவும் ஒரு தொற்று நோயாகும். எனவே உங்களைச் சுற்றி யாராவது இந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அவரிடமிருந்து இடைவெளியை பின்பற்றுவது நல்லது.. குறிப்பாக குழந்தைகளை நோயாளியின் அருகில் வர அனுமதிக்காதீர்கள். இந்த தவறு உங்கள் குழந்தைக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.

உங்கள் வீட்டிற்கு உள்ளேயும் சுற்றிலும் தூய்மையை பராமரிக்கவும். குழந்தையின் உடலில் சிவப்பு சொறி இருந்தால், ஆரோக்கியமான குழந்தைகளை பாதிக்கப்பட்ட நோயாளிகளிடமிருந்து விலக்கி வைக்கவும், அவர்களின் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். கோடைக்காலத்தில் உடலில் நீர்ச்சத்து இல்லாமல் இருக்கக் கூடாது. பழச்சாறுகளை குடித்துக்கொண்டே இருங்கள்.

தக்காளி காய்ச்சலின் அறிகுறிகளை அறிந்து, அதைப் பார்த்தவுடன் உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகவும். தோலில் சிவந்த கொப்புளங்கள், தோலில் எரிச்சல், மூட்டு வலி, மூக்கு ஒழுகுதல், அதிக காய்ச்சல், வயிற்று வலி, வாந்தி, இருமல், உடல் வலி, தும்மல், வயிற்றுப்போக்கு மற்றும் சோர்வு ஆகியவை இதன் அறிகுறிகளாகும். எனினும் எந்த வீட்டு வைத்தியத்தை முயற்சிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது..

தக்காளி காய்ச்சல் ஏற்பட்டால், குழந்தை அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் குடித்தால் பல பிரச்சனைகள் தீரும். இது தவிர, சொறி உள்ள பகுதியையும் மெதுவாக சுத்தம் செய்ய வேண்டும். ஆனால் அந்த சொறியை எந்த விதத்திலும் உங்கள் நகங்களால் திண்டிராதீர்கள். அப்போது தொற்று ஏற்படும் அபாயம் பன்மடங்கு அதிகரிக்கும். எனவே கவனமாக இருப்பதை தவிர வேறு வழியில்லை.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/