இன்று முதல் 4 நாட்களுக்கு மழையா ?? எந்த மாவட்டத்துக்கு ??

இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடங்க உள்ளது. ஓரிரு இடங்களில் வெயிலின் தாக்கம் அடுத்த 2 நாட்களுக்கு 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கலாம்.

இன்று தெற்கு அந்தமான் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியதன் அடிப்படையில் இன்று முதல் மே 7ம் தேதி வரையிலான 4 நாட்களுக்கு தமிழகத்தில் தொடர் மழைக்கு வாய்ப்பு உள்ளது

மே 5 ம் தேதி கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், நீலகிரி மாவட்டங்களில் மழை பெய்யும் .

மே 7ம் தேதி கடலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்கால், ஈரோடு, கரூர், மதுரை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.

தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 60 கி.மீ. முதல் 70 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 80 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/