இன்ஸ்டாகிராம் பிரபலத்துக்கு இந்த நிலைமையா ??

ஆப்பிரக்க நாடான தன்சானியாவைச் சேர்ந்தவர் கிலி பால். இவர் தனது சகோதரி நீமா பாலுடன் சேர்ந்து டிக்டாக்கில் இந்திய பாலிவுட் திரைப்பட பாடல்கள் பலவற்றுக்கு லிப் சிங் செய்து வருகிறார்.

கிலிபால்

புஷ்பா பட பாடல்களை மையப்படுத்தி, டிரெண்டிங் ஆன நடனப் போட்டியிலும் அவர்கள் கலந்து கொண்டனர்.

டிக்டாக்கில் மட்டுமல்லாமல், இன்ஸ்டாகி தளத்திலும் மிகவும் பிரபலம் அடைந்த கிலி பால் அக்கவுண்டை 2.2 மில்லியன் பேர் ஃபாலோ செய்கின்றனர்.

பழங்குடி இளைஞரான கிலி பால் சமீபத்தில் ‘எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்’ என குறிப்பிட்டு இருந்தது ஃபாலோயர் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

இந்நிலையில், தன்னை 5 பேர் கொண்ட கும்பல் தாக்கியதாகவும், அவர்கள் தாக்கியதில், தனது வலது கையின் கட்டை விரலில் 5 தையல் போடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/