திருமணம் செய்து வைக்குதா ஐடி நிறுவனம்?….

பல ஐடி நிறுவனங்கள் தனது ஊழியர்களுக்கு விலை உயர்ந்த கார்கள், பரிசு பொருட்கள், கொடுப்பதை நாம் பார்த்திருக்கிறோம்

மதுரையில் செயல்படும் ஸ்ரீ மூகாம்பிகா இன்ஃபோசோல்யூஷன் நிறுவனம், ஊழியர்களுக்கு வரன் பார்த்து திருமணம் செய்து வைத்து அவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

இந்நிறுவனத்தின் உரிமையாளர் எம்.பி செல்வகணேஷ், “எங்கள் நிறுவனத்தில் நீண்ட காலமாக வேலை செய்யும் ஊழியர்கள் உள்ளனர் . அவர்கள் வேறு எங்கும் செல்ல மாட்டார்கள் என கூறமுடியாது. இந்த முடிவை அவர்கள் எடுக்கும் முன்பே அவர்களுக்கு உரியதை வழங்க வேண்டும் என நினைத்தோம்.

எல்.ஐ.சி.யில் தீ விபத்து!!

இதன் ஒரு பகுதியாகவே இந்த அறிவிப்புகள். எங்கள் நிறுவனத்தில் வேலைபார்க்கும் பலர் கிராமப்புறத்தில் இருந்து வருகிறார்கள். அவர்களுக்கு வரன் கிடைக்காமல் சிரமப்படுவதால் ஊதியத்துடன் உயர்வு வழங்கப்படும் என அறிவிப்பை வெளியிட்டுள்ளோம்” என கூறினார் .

திருப்பதியில் நயன்தாராக்கு திருமணமா ??

தமிழ்நாட்டில் 2006ம் ஆண்டு சிவகாசியில் ஸ்ரீ மூகாம்பிகா இன்ஃபோசோல்யூஷன் நிறுவனம் துவங்கப்பட்டது. பின்னர் 2010ம் ஆண்டு மதுரைக்கு இந்த நிறுவனம் தனது தலைமை இடத்தை மாற்றியது.

குறைந்த வருவாயையே இந்நிறுவனம் ஈட்டிவந்தாலும் ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு அறிவித்துள்ள இந்த முடிவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.