IPL தொடரிலிருந்து ஜடேஜா விலகல்?

சென்னை அணியின் ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக இந்த தொடரில் மீதமுள்ள போட்டிகளில் இருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ஜடேஜாவுக்கு காயம் ஏற்பட்டது.இதனால் கடந்த மே 8ம் தேதி நடைபெற்ற டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் விளையாடவில்லை .
  1. காயத்திலிருந்து ஜடேஜா இன்னும் மீளாததால் அவர்  தொடரில் மீதமுள்ள போட்டிகளில் இருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .சென்னை அணி அடுத்த போட்டியில் நாளை மும்பை அணியுடன் மோத உள்ளது .