கே.ஜி.எஃப். நடிகர் திடீர் மரணமா ?? ரசிகர்கள் அதிர்ச்சி!

நடிகர் யாஷ் நடித்த கேஜிஎப்2 படத்தில் நடித்த பிரபல நகைச்சுவை நடிகர் மோகன் ஜுனேஜா காலமானார். இவர் கன்னட திரையுலகில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர் ஆவார்.

இவர் இந்தி, மலையாளம் போன்ற 100க்கும் மேற்பட்ட பிற மொழிப்படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

மோகன்

உடல்நலக்குறைவு காரணமாக மோகன் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி துரதிருஷ்டவசமாக அவர் காலமானார்.

மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா!

அவரது திடீர் மறைவு காரணமாக கன்னட திரையுலகமே அதிர்ச்சியிலும், சோகத்திலும் மூழ்கியுள்ளது.

இன்று மாலை மோகன் ஜுனேஜாவின் இறுதிச்சடங்குகள் நடைபெற உள்ளது. இவர் வடாரா என்ற சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகராக அடையாளம் காணப்பட்டார்