செவ்வாய் கிரகம் – “டோர்வே” புகைப்படத்தை வெளியிட்ட நாசா.!

1958 இல் உருவாக்கபட்ட அமெரிக்க ஆராய்ச்சி நிலையம் நாசா (NASA)தொடர்ந்து விண்வெளி ஆராய்ச்சி செய்து விண்ணுக்கு செயற்கை கோள் அனுப்பி பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து தகவல்களை உலகிற்கு தெரிவித்து வருகிறது நாசா.

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ வாய்ப்புகள் இருக்கிறதா என ஆராய்ச்சி நடத்திவருகிறது. இந்நிலையில், செவ்வாய் கிரகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

தற்போது செவ்வாய் கிரகத்தில் வாசல் (Doorway) கொண்ட பாறை அமைப்பு இருப்பதை புகைப்படமாக எடுத்து வெளியிட்டுள்ளது.இது அவர்களின் கியூரியாசிட்டி ரோவர் (Curiosity rover) மூலம் எடுக்கப்பட்டது.

குரூப்-2, குரூப்-2ஏ தேர்வர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி முக்கிய அறிவிப்பு..!

பாறையின் வாசல் பற்றி அமெரிக்க விண்வெளி நிறுவனத்திடமிருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும் இந்த பாறையின் வாசல் அமைப்பில் என்ன இருக்கலாம் மற்றும் இது இயற்கையான அம்சமா என்று விண்வெளி மற்றும் அறிவியல் ஆர்வலர்களுக்கு மத்தியில் விவாதங்கள் நடைபெறுகின்றன.