அடுத்து அறிமுகமாகும் சாம்சங்கின் புதிய 5G போன்

சாம்சங் நிறுவனம் எம் சீரிஸின் புதிய மலிவு விலை ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது. சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி போன் தொடர்பாக ஒரு புதிய அறிக்கையின் வெளியாகியுள்ளது.

பட்ஜெட் விலையில் அடுத்து அறிமுகமாகும் சாம்சங்கின் புதிய 5G போன்

இந்த ஸ்மார்ட்போன் 15 வாட் வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்படும்

அந்தவகையில் தற்ப்போது கசிந்துள்ள போனின் பர்ஸ்ட் லுக்கின் படி, இதன் பின்புறத்தில் இரட்டை கேமராக்கள் இருக்கும்

சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி ஆனது கேலக்ஸி எம்33 5ஜி வெளியீட்டிற்குப் பிறகு விரைவில் இந்திய சந்தையில் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த மலிவு விலை ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11-அடிப்படையிலான One UI ஸ்கின் உடன் வரும் என்று கூறப்படுகிறது. இந்த போனில் 6.5 இன்ச் ஃபுல் எச்டி + டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே இருக்கும். சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி ஆனது 5,000எம்ஏஎச் பேட்டரி, 6ஜிபி ரேம், 128ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் குவாட்-கேமரா கான்பிகரேஷனுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கல்லூரிகளுக்கும் விடுமுறை!!

மேலும் சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி ஆனது கடந்த ஆண்டு வெளியான சாம்சங் கேலக்ஸி எம்12 4ஜி இலிருந்து மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரேஷன் கடைகளில் இன்று மக்கள் குறைதீர் முகாம்!

சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி போனில் இரட்டை கேமரா அமைப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது. உடன் எல்இடி பிளாஷ் கீயும் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் பிரதான கேமரா 50எம்பி மற்றும் 2எம்பி டெப்த் சென்சார் ஆகியவற்றைக் காணலாம். அதேபோல் இந்த சாம்சங் ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி பேனல் கொடுக்கப்படலாம். வாட்டர் டிராப் நாட்ச் அம்சம் போனின் டிஸ்ப்ளேவில் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் யூ.எஸ்.பி டைப் சி சார்ஜிங் போர்ட் மற்றும் ஸ்பீக்கர் கிரில்ஸ் போன்ற அம்சங்களையும் நீங்கள் பெறலாம்.

 

Leave a Reply

Your email address will not be published.