நாடு முழுவதும் அவசரநிலை, ஊரடங்கு அறிவித்து அதிபர் உத்தரவு

வடகொரியாவில் முதல் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வடகொரிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதையடுத்து நாடு முழுவதும் கடுமையான தேசிய அவசரநிலை அறிவிக்கப்பட்டு, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் ஊரடங்கு அறிவிக்கப்படுகிறது. இதன்மூலம் கொரோனா வைரஸ் பரவுவதற்கான அனைத்து கதவுகளும் அடைக்கப்படுகிறது.
மக்கள் கொரோனா தொற்றை ஒழிக்க ஒன்று சேர்ந்து உறுதிமொழி எடுக்க வேண்டும் என வடகொரிய அதிபர் கூறினார்.