தேர்வே இல்லாமல் தபால் துறை பணி!!

இந்திய தபால் துறை நாடு முழுவதும், கிராம தபால் ஊழியர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தேர்வே இல்லாமல் 38,926 பேருக்கு வேலை: தபால் துறை பணிக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?

இந்த பணியிடங்களுக்கு தேர்வு கிடையாது. 10 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது ?

கிராம தபால் சேவை மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை – 38,926

தமிழ்நாட்டில் காலியிடங்களின் எண்ணிக்கை – 4,310

கல்வித் தகுதி : 10-ஆம் வகுப்பு தேர்ச்சி, சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும் SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம் : கிராம தபால் ஊழியர் (BPM) – ரூ.12,000

உதவி கிராம தபால் ஊழியர் (ABPM/DakSevak) – ரூ.10,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு 10 வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 05.06.2022

விண்ணப்பக் கட்டணம் : பொது பிரிவுக்கு ரூ. 100; SC/ST, மாற்றுத்திறனாளிகள், பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://indiapostgdsonline.gov.in/Notifications/Model_Notification.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/