ரேஷன் கடைகளில் இன்று மக்கள் குறைதீர் முகாம்!

சென்னை ரேஷன் கடைகளில் இன்று மக்கள் குறைதீர் முகாம்,சென்னை மக்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு. சென்னையில் பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் இன்று 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் நடைபெறுகிறது.

ரேஷன் கார்டு உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு - மிஸ் பண்ணிடாதீங்க மக்களே...

குடும்ப அட்டையில் மாற்றங்கள் செய்தல், புதிய குடும்ப அட்டை விண்ணப்பம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத்திட்டத்தின் மூலம் குடிமக்கள் சேவைகளை உறுதி செய்யும் பொருட்டு தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.

கல்லூரிகளுக்கும் விடுமுறை!!

 அதன்படி, குறைகளைக் கேட்டுத் தீர்வு காணும் பொருட்டு மே மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் இன்று (14ம் தேதி) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.

புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றைப் பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.