தமிழகம் முழுவதும் பிளஸ்-1 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது…

தமிழகம் முழுவதும் பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு 2021-22-ம் கல்வி ஆண்டிற்கான அரசு பொதுத்தேர்வுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி வருகிற 31-ந்தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த தேர்வினை 8 லட்சத்து 83 ஆயிரத்து 884 பேர் எழுதுகிறார்கள். 4 லட்சத்து 33 ஆயிரத்து 684 மாணவர்களும், 4 லட்சத்து 50 ஆயிரத்து 198 மாணவிகளும் எழுத உள்ளனர்.

தமிழகம் முழுவதும் 3,119 மையங்களில் இத்தேர்வு நடைபெறுகிறது.

தேர்வை கண்காணிக்க 1000 பறக்கும் படைகள் மற்றும் நிலையான குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.