சவர்மாவை தொடர்ந்து பப்ஸ்.. தமிழகத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

கள்ளக்குறிச்சி, சின்னசேலம் ஒன்றிய அலுவலகம் அருகே அரோமா கேக்ஸ் என்ற பேக்கரி அமைந்துள்ளது. கேரளாவைச் சேர்ந்தவர்களால் நடத்தப்படும் இந்த பேக்கரியில் நேற்று முன்தினம் இரண்டு பெண்கள் பப்ஸ் வாங்கிச் சென்றுள்ளனர்.

#BREAKING:- சவர்மாவுக்கு அடுத்து பப்ஸ்.. தமிழகத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

அவற்றைச் சாப்பிட்ட பெண்களின் குழந்தைகள் வீட்டில் வாந்தி எடுத்துள்ளார்.குழந்தைகள் சாப்பிட்ட பப்சை எடுத்து பெண்கள் சாப்பிட்ட போது, அது கெட்டுப் போய் இருந்தது தெரியவந்தது.

இதன் பின் ஆத்திரமடைந்த இரண்டு பெண்களும் பேக்கரிக்கு சென்று, ‘கெட்டுப்போன பப்ஸை ஏன் விற்றீர்கள்..?’ எனக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் கடைக்காரர்கள் திணறினர்.பேருந்து கட்டணம் உயர்வு!! அமைச்சர் அதிரடி!!

சிலர் இதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர, தற்போது அது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பொதுமக்கள் லாபத்துக்காக கெட்டுப்போன உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் பேக்கரிகள், உணவகங்கள் மீது உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.