அடுத்த 3 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் மழையா ??

மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவுகிறது. இது படிப்படியாக மேலும் வலுவிழக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இன்று தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை நீலகிரி, கோவை ,திருப்பூர் ,தேனி ,திண்டுக்கல் ,ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இந்திய அஞ்சல் துறையில் 650 காலிப் பணியிடங்கள்

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வருகிற 16ம் தேதி வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 18 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், அதேபோல் வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும்