அன்று ரெய்னா! இன்று ஜடேஜா! நாளை..? திட்டமிட்டு கட்டம் கட்டுகிறதா சிஎஸ்கே நிர்வாகம்?

தோனியை விட அதிக தொகைக்கு ஜடேஜாவை தக்கவைத்த நிர்வாகம், அவர் மீதான அழுத்தத்தை குறைப்பதற்கான செயலை சீசனின் துவக்கத்திலேயே செய்திருக்க வேண்டும்.

அப்போதுதான் சென்னையும் பிளே ஆஃப் வாய்ப்பில் முன்னேற துவங்கியிருக்கும். ஜடேஜாவும் பொறுப்புணர்ந்து இயல்பான ஆட்டத்திற்கு திரும்பியிருப்பார்.

ஆனால் மொத்த சீசனும் கைவிட்டு போன பின் கேப்டன் மாற்று அறிவிப்பை சிஎஸ்கே வெளியிட்டது. எப்போதும் மிகச் சரியாக அணித் தேர்வை முன்னெடுக்கும் சிஎஸ்கே நிர்வாகம், தனது கேப்டன் தேர்வில் கண்ணாமூச்சி ஆடாமல் இருந்திருந்தால் ஜடேஜாவுக்கு காயம் கூட ஏற்படாமல் போயிருக்கலாம்!

மிஸ்டர் ஐபிஎல் என்று புகழப்பட்ட ரெய்னா ஏலத்தில் விலைபோகாமல் இந்த சீசன் துவக்கத்தில் சிஎஸ்கே அணியை விட்டு வெளியேற, சீசனின் மத்தியில் ஜடேஜாவும் தொடரை விட்டே விலகும் அறிவிப்பு வெளியானதால் சிஎஸ்கே ரசிகர்கள் அணி நிர்வாகம் மீது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.