தீயணைப்பு வீரர்களுக்கு சல்யூட்

பணியின் போது உயிர் இழந்த தீயணைப்பு வீரர்களுக்கு வீர அஞ்சலி செலுத்தும் விதமாகவும் ஆண்டுதோறும் மே மாதம் 4ம் தேதி சர்வதேச தீயணைப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.

தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் பிற உயிர்களையும் உடைமைகளையும் காப்பாற்றுகிற வீரமும் ஈரமும் நிறைந்தது தீயணைப்பு வீரர்களின் பணி.

ஒரு விபத்து ஏற்பட்டதும்,101 என்ற எண்ணைச் சுழற்றி சம்பவம் நடந்த இடத்தை தெளிவாக ஏதேனும் ஒரு அடையாளத்துடன் தெரிவிக்க வேண்டும்.

தீ விபத்து குறித்த தகவல் வந்த 20 வினாடிகளுக்குள் தீயணைப்புப் படையினர் வண்டியுடன் புறப்படுவார்கள். சம்பவ இடத்தை அடைந்ததும் மின்னல் வேகத்தில் செயலாற்றுவார்கள்.

ஆபத்துக்களையும் தாண்டி சக உயிர்களைக் காப்பதொன்றே கடமையாகக் கொண்டிருக்கிறார்கள் தீயணைப்பு வீரர்கள். போர்க்களத்தில் எதிரிகளோடு போரிடும் வீரர்களுக்குச் சற்றும் சளைத்ததல்ல இவர்கள் பணி.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/