சவர்மா! அதிகாரிகள் ரெய்டு..

கடந்த இரு தினங்களுக்கு முன்பு கேரளாவின் பள்ளி மாணவ, மாணவிகள் குழுவாக சென்று சவர்மா வாங்கி சாப்பிட்டனர்.

அதன் பின் சுமார் 15 பேருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது மருத்துவமனைகளில் அனுமதிக்க அவர்களில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதன் எதிரொலியாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சவர்மா கடைகளில் சோதனை செய்து வருகின்றனர்.

ஏழை எளிய மக்களுக்கு இப்படிக்கூட உதவலாமா …புதிய முயற்சியில் சாதித்த பெண்..!!

காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி அனுராதா தலைமையில் குழு ஒன்று காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் 13 இடங்களில் இயங்கும் சவர்மா கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

சவர்மா விற்கும் கடைகளில் பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் கோழி கறியை அவர்கள் ஆய்வு செய்தனர். இதில் கடைகளில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளை பரிசோதனை கூடங்களுக்கு அனுப்பி தரத்தை கண்டறிந்து வருகின்றனர்.

கடைகளில் பாதுகாப்பில்லாத பிளாஸ்டிக் பயன்படுத்தி சவர்மா தயாரிக்கும் 10 கடைகளுக்கு தலா ரூ.2,000 அபராதமும் விதிக்கப்பட்டது