மருத்துவ கல்லூரியில் 30+ காலிப்பணியிடங்கள் | தேர்வு கிடையாது..!

ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி (JLN) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Senior Resident பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற மருத்துவ கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் MD, MS, DM, M.Ch பட்டம் முடித்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Senior Resident பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 45 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Senior Resident பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 24.05.2022 அன்று நடைபெற உள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.