திவாலான இலங்கை அரசு … உலக நாடுகளுக்கு பறந்த எச்சரிக்கை!

இலங்கைக்கு கடன் கொடுத்தவர்களிடம் அந்நாட்டின் மத்திய வங்கியின் கவர்னர் நந்தலால் வீரசிங்க நாட்டின் மொத்த கடன் அளவை மறுசீரமைக்கும் வரையில் அரசால் கடனுக்கான எந்தப் தொகையையும் செலுத்திட முடியாது என கூட்டம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து முதல் முறையாக இலங்கை அரசு ஏப்ரல் 18 ஆம் தேதி கடனாளர்களுக்குச் செலுத்த வேண்டி 78 மில்லியன் டாலர் மதிப்புடைய கூப்பன்களை அளிக்க 30 நாட்கள் அவகாசம் முடிந்த நிலையிலும் செலுத்தவில்லை. இதன் மூலம் அதிகாரப்பூர்வமாக இலங்கை திவாலாகியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இலங்கையில் ஏற்கனவே பணவீக்கம் 30 சதவீதமாக இருக்கும் நிலையில் வரவிருக்கும் மாதங்களில் 40 சதவீதமாக ஆக அதிகரிக்கும் என நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். ஜனவரி மாதம் முதல் வெளிநாட்டில் இருந்து இலங்கை வாங்கிய அத்தியாவசிய பொருட்களின் நிலுவைத் தொகை அதிகரித்துள்ளது.

சுதந்திரம் பெற்ற பிறகு முதல் முறையாக வாங்கிய கடனை திருப்பித் செலுத்த முடியாமல் இலங்கை திணறி வருவது குறிப்பிடத்தக்கது.