மாணவர்களுக்கு கடும் எச்சரிக்கை!!அலைபேசிக்கு தடை !

மே 5 ம் தேதி தமிழகம் முழுவதும் 12 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்க உள்ளது. தேர்வுகள் குறித்து தேர்வு இயக்ககம் சார்பில் பல்வேறு விதமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது.

தேர்வு மையங்களில் ஆசிரியர்கள், மாணவர்கள் என யாரும் அலைபேசி கொண்டு வரக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.

தேர்வு

விடைத்தாள் மையங்களுக்கு 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய காவல் துறையினரின் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தல், காப்பி அடித்தல் போன்ற செயல்களில் மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டால் பருவ தேர்வு ரத்து செய்யப்படுவதுடன் மட்டுமில்லாமல் தேர்வு எழுத நிரந்தர தடை விதிக்கப்படும்

மாணவர்களின் குற்றச் செயல்களுக்கு முறைகேடுகளுக்கு பள்ளி நிர்வாகம் துணை போனால் அந்தந்த பள்ளி அங்கீகாரம் ரத்து செய்யப்படும்

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/