அடுத்தடுத்து வெளிநாடு பயணமா ??

தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் துபாய் எக்ஸ்போவில் கலந்துகொண்டு லுலு குழுமத்தின் தலைவர் யூசுஃப் அலியை அபுதாபியில் சந்தித்துப் பேசி ,லுலு நிறுவனம் தமிழகத்தில் ரூ.3500 கோடி முதலீடு செய்ய உள்ளது.

6 மிக முக்கிய தொழில் நிறுவனங்களுடன் ரூ.6,100 கோடி மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. சுமார் 14,00 பேருக்கு வேலைவாய்ப்பு காத்திருக்கிறது எனத் தெரிவித்திருந்தார்.

அசானி புயல் – 2ம் எச்சரிக்கை கூண்டு !!

தற்போழுது தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் லண்டன்,அமெரிக்கா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்திற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் பதவி ஏற்றபின் 2வது முறையாக அவர் வெளிநாடு செல்வது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் அவர்கள் ஜூன் இறுதியில் லண்டனுக்கும், ஜூலையில் அமெரிக்காவுக்கும் சென்று வர உள்ளார் .