கோடை வெயில் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை மாநகராட்சி சார்பில் கோடைகால வெப்பம், வெப்ப அலை பாதிப்பு தடுப்பு விழிப்புணர்வு கண்காட்சியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடக்கி வைத்தார்.

வேலூர், மதுரை, கரூர், சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் நிலவுகிறது.

tn

கோடை காலம் முடியும் வரை மக்கள் தண்ணீர் பாட்டில்களுடன் வெளியே செல்லுங்கள். தாகம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கோடைகாலத்தில் போதிய அளவு நீர் குடிக்க வேண்டும்.

ஆம்லேட் போடும் அளவுக்கு வெயில் உள்ளதால் வாகனங்களின் சீட்டில் துண்டை போட்டு மறைத்து வைக்கவும்

பாட்டில்களில் குளிர்பானங்களை தவிர்த்து எலுமிச்சை உள்ளிட்ட பல சாறுகளை பகிருங்கள்; அவசியம் இல்லாமல் பகல் 11 முதல் பிற்பகல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.

முழு உடலையும் மூடும் ஆடைகளை அணிவதன் மூலம் வெப்பத்தில் இருந்து காத்துக் கொள்ளுங்கள். காலனி இல்லாமல் செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும்..

சென்னையில் வருகிற 8ம் தேதி 3,000 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/