தமிழக வீராங்கனைகள் முதலிடம்!

தென்னிந்திய அளவிலான 3 நாட்கள் கபடி போட்டி நெல்லை மாவட்டம் கூடங்குளம் , செட்டி குளத்தில் நடைபெற்றது.

இந்த கபடி போட்டியில் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இருந்து 16 அணிகள் ஆண்கள் பிரிவில் விளையாடினர்.

கபடி பெண்கள் அணி

ஆண்கள் பிரிவு போட்டியில் கர்நாடக அணியும், பெண்கள் பிரிவில் தமிழக அணியும் வெற்றி பெற்று முதலிடம் பிடித்துள்ளன.

போட்டியில் வென்ற பேங்க் ஆப் பரோடா அணி 24:11 என்ற புள்ளி கணக்கில் முதலிடத்தை பிடித்தது. இதனை கவுரவிக்கும் வகையில் ரூ.1 லட்சம் பரிசாக அளிக்கப்பட்டது.

விலை உயர்வு! அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!!

பெண்கள் பிரிவில் ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் இருந்து 13 அணிகள் கலந்து கொண்டன.

கபடி பெண்கள் அணி

இதில் விளையாடிய ஒட்டன்சத்திரம் அணி, பெங்களூர் அணியை களத்தில் சந்தித்தது. 41:35 என்ற புள்ளி கணக்கில் பெங்களூர் அணியை வீழ்த்தி ஒட்டன் சத்திம்ரம் அணி முதல் இடத்தில் வெற்றி பெற்றுள்ளது.

முதல் பரிசும், கோப்பையுடன் ரூ.50 ஆயிரம் ரொக்கம் வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடித்த கர்நாடக அணிக்கு ரூ.25 ஆயிரமும் கோப்பையும் வழங்கப்பட்டது.