ஆந்திராவை நெருங்கும் அசானி புயல்- ரெட் அலர்ட்

அசானி புயல் ஆந்திரா, ஒடிசா கடல் பகுதியில் மையம் கொண்டுள்ளது. ஆந்திராவின் காக்கிநாடாவிலிருந்து 210 கிமீ தொலைவிலும், விசாகப்பட்டினத்திலிருந்து 310 கிமீ தொலைவிலும் இந்த புயல் மையம் கொண்டுள்ளது.

நாளை (மே 11ம் தேதி) காலை காக்கிநாடா மற்றும் விசாகப்பட்டினம் கடற்கரையை அசானி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஆந்திராவுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் விசாகப்பட்டினம் அருகில் மேற்கு-மத்திய வங்காள விரிகுடாவை அடையும் அசானி வலு இழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அசானி புயல் காரணமாக ஒடிசா மற்றும் ஆந்திர மாநிலம் காக்கிநாடா, விசாகப்பட்டினம் உள்ளிட்ட பகதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.