மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்சுக்கு கொரோனா தொற்று

உலக பணக்காரர்கள் வரிசையில் ஒருவரும், மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில்கேட்சுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பில்கேட்ஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், எனக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

சிறிய அளவிலான அறிகுறிகள் தெரிந்தது. எனவே தொற்றில் இருந்து குணமாகும் வரை என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறது.