இலங்கையில் புதிய பிரதமர்?- அதிபர் கோத்தபய ராஜபக்சே

இலங்கை பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்த நிலையில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் அரசு சார்பில் புதிய பிரதமர் நியமிக்கப்படுவர் என்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

இன்னும் ஒரு வாரத்தில் புதிய பிரதமர் தேர்வு செய்யப்பட்டு அமைச்சரவையும் உருவாக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், அமைதி காக்க இலங்கை மக்களுக்கு அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வன்முறையில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவும் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்.