ஹவானா ஓட்டல் வெடி விபத்து – பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு…

கியூபா நாட்டின் தலைநகர் ஹவானாவில் சரடோகா என்ற நட்சத்திர ஓட்டல் உள்ளது. 86 அறைகள் கொண்ட இந்த ஓட்டலில் புதுப்பிக்கும் பணி நடந்து வந்தது.

இந்த ஓட்டலில் கடந்த சில நாட்களுக்கு முன் இயற்கை எரிவாயு செல்லும் குழாயில் கசிவு ஏற்பட்டு வெடித்துச் சிதறியது .

சக்திவாய்ந்த வெடிவிபத்தால் ஓட்டலைச் சுற்றியுள்ள கட்டிடங்களும் சேதமடைந்தன.

இந்நிலையில், ஹவானா ஓட்டல் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. இதில் கர்ப்பிணி பெண், குழந்தைகளும் அடங்குவர்.