டெல்லியில் பயங்கரம் 27 பேர் பலி !!

டெல்லியில் முண்ட்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகே, 3 அடுக்குகள் கொண்ட வணிகக் கட்டடம் உள்ளது. அங்கு நேற்று மாலை திடீரென தீப்பற்றியது.

பற்றி எரிந்த வணிக வளாகம்... பறிபோன 27 உயிர்கள்: டெல்லியில் நடந்த பயங்கரம்

அடுத்தடுத்து 3 மாடிகளுக்கும் தீ பரவி புகை மண்டலம் சூழ்ந்ததில், உள்ளே இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் சிக்கித் தவித்தனர்.

தீயணைப்புப் படையினர் 24 வாகனங்களில் விரைந்து வந்து, தீயை கட்டுப்படுத்த போராடினர். இந்த விபத்தில் 27 பேர் உடல்கருகி உயிரிழந்தனர்.

50 க்கும் அதிகமானோர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும்

தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இதனிடையே, வணிக வளாகத்தில் நிறுவனம் நடத்திய 2 பேரை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோ வெளியிட்டு நூல் வியாபாரி எடுத்த விபரீத முடிவு…

உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும் காயமுற்றோருக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், விபத்தில் பல உயிர்கள் பரிதாபமாக உயிரிழந்தது மிகவும் வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published.